Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : குழு மோதலில் ஒருவர் பலி!!

பரிஸ் : குழு மோதலில் ஒருவர் பலி!!

1 சித்திரை 2024 திங்கள் 14:05 | பார்வைகள் : 15158


பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற குழு மோதல் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 

canal Saint-Martin ஆற்றுப்பகுதிக்கு அருகே நேற்று முன் தினம் மார்ச் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த குழு மோதல் இடம்பெற்றுள்ளது. 

மார்ச் 31, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர். அங்கு கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான நிலையில் நபர் ஒருவருடைய சடலம் அங்கிருந்து மீட்கப்பட்டது.

தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் 26 மற்றும் 28 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குழு மோதலில் 30 பேர் வரை ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்