Paristamil Navigation Paristamil advert login

யாழில் இரு கும்பல்களுக்கிடையில் மோதல் - 22 பேர் காயம்

யாழில் இரு கும்பல்களுக்கிடையில் மோதல் - 22 பேர் காயம்

2 சித்திரை 2024 செவ்வாய் 11:47 | பார்வைகள் : 1385


யாழ்ப்பாணம், புறநகர் பகுதியில் இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் ,  22 பேர்  காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல்களுக்கு இலக்காகி காயங்களுடன் திடீரென 22 பேர் வைத்தியசலையில் குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்குள் அனுமதிக்கப்பட்டமையால் , வைத்தியர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டதாகவும்  தெரிவிக்கப்படுகிறது. 

அதேவேளை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் , அவர்களுடன் உதவிக்கு வந்தவர்கள் , வைத்தியசாலையினுள்ளும் மோதல் போக்குடன் காணப்பட்டதுடன் , மோதலில் ஈடுபடவும் முயன்றுள்ளார்கள்  என தெரியவந்துள்ளது .

மேலும்  , சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்