எமியின் சடலத்தை தேடும் பணி தீவிரம்! - ஆடைகள் கண்டுபிடிப்பு!
2 சித்திரை 2024 செவ்வாய் 17:30 | பார்வைகள் : 5324
கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பாக காணாமல் போயிருந்த எமிலி எனும் இரண்டரை வயது சிறுவனின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதும், மீண்டும் தேடுதல் பணி தீவிரமாக்கப்பட்டது. ஐந்து மோப்ப நாய்களுடன் சிறப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
எமிலி - மர்மங்கள்!
பெண் ஒருவர் மண்டை ஓடு ஒன்றை கைகளால் தூக்கிக்கொண்டு வந்து காவல்துறையினரிடம் கையளித்துள்ளார். அதையடுத்து இச்சம்பவம் மேலும் பல கோணங்களில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
சிறுவனை காட்டு விலங்குகள் எமிலியை இழுத்துச் சென்றிக்கலாம் எனும் கோணத்திலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சற்றுமுன்னர் 'எமிலியின் ஆடைகள்' கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரி-சேர்ட், சப்பாத்து மற்றும் உள்ளாடை போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதனை தடயவியல் துறையினர் உடனடியாக ஆய்வுகளுக்கு கொண்டுசெல்ல உள்ளனர்.