Paristamil Navigation Paristamil advert login

கோல் அடிக்க தவறிய ரொனால்டோ.. கடைசி நிமிடத்தில் வெற்றியை பெற்றுத் தந்த வீரர்

கோல் அடிக்க தவறிய ரொனால்டோ.. கடைசி நிமிடத்தில் வெற்றியை பெற்றுத் தந்த வீரர்

6 சித்திரை 2024 சனி 11:03 | பார்வைகள் : 469


நேற்று நடந்த கால்பந்து போட்டியில் ரொனால்டோவின் அல் நஸர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் டமாக் அணியை வீழ்த்தியது. 

சவுதி புரோ லீக் தொடரின் நேற்றைய போட்டியில் டமாக் (Damac) அணியை எதிர்கொண்டது அல் நஸர் (Al-Nassr).

பரபரப்பாக ஆரம்பித்த இப்போட்டியில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ substitute ஆக அமர வைக்கப்பட்டார்.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே டமாக் அணி வீரர்கள் அல் நஸருக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தனர். 25வது நிமிடத்தில் டமாக் அணி வீரர் நிக்கோலே ஸ்டான்சி அபாரமாக செயல்பட்டு, தலையால் முட்டி கோல் முயற்சி செய்தார். 

ஆனால், அல் நஸர் கோல் கீப்பர் ஓஸ்பினா சிறப்பாக செயல்பட்டு அதனை தடுத்தார். பின்னர் லபோர்ட்டின் (அல் நஸர்) 35வது நிமிடத்தில் கோல் அடிக்கும் முயற்சி தோல்வியடைந்தது.

ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் வீரர் கியாஸ்ஸம் எதிரணி வீரரை வேண்டுமென்றே மோதியதாக மஞ்சள் அட்டை பெற்றார். இரண்டாம் பாதியின் 46வது நிமிடத்தில் மானே அடித்த ஷாட், நூலிழையில் கோல் கம்பத்தை விட்டு விலகி சென்றது.  

இந்தநிலையில் ரொனால்டோ களம் புகுந்தார். 69வது நிமிடத்தில் அல் நஸரின் லஜாமி எதிரணி வீரரை துரத்திலின்போது தள்ளிவிட்டதால் மஞ்சள் அட்டை பெற்றார்.

இதற்கிடையில் ரொனால்டோ தனது அணி வீரர்களுக்கு கோல் அடிக்கும் வாய்ப்புக்கு உதவினார். ஆனால் அவர் எந்த கோலும் அடிக்கவில்லை. 

82வது நிமிடத்தில் ரொனால்டோ பாஸ் செய்த பந்தை கரீப் கோல் வலைக்கு திருப்பினார். ஆனால் அது கோல் கம்பத்தில் பட்டு வெளியே வந்தது.

ரொனால்டோ 86வது நிமிடத்தில் கோல் கம்பத்தின் அருகில் பந்தை கடத்திச் சென்று தவறி விழுந்தார். ஒருவழியாக அல் நஸரின் போராட்டத்திற்கு 90+1வது நிமிடத்தில் பலன் கிடைத்தது.

கார்னர் கிக்கில் இருந்து வந்த பந்தை, லபோர்ட் (பிரான்ஸ்) தலையால் முட்டி கோலாக மாற்றினார். அதன் பின்னரான கூடுதல் 5 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்காததால், அல் நஸர் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.    

வர்த்தக‌ விளம்பரங்கள்