Paristamil Navigation Paristamil advert login

ஒரு மணித்தியாலத்தில்  1,123 மரங்களை கட்டிப்பிடித்த இளைஞர்

ஒரு மணித்தியாலத்தில்  1,123 மரங்களை கட்டிப்பிடித்த இளைஞர்

10 வைகாசி 2024 வெள்ளி 08:56 | பார்வைகள் : 570


உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர்.

அந்த வகையில் மரங்களை கட்டிப்பிடித்து ஒரு வாலிபர் உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கானாவை சேர்ந்தவர் அபுபக்கர் தாஹிரு. 29 வயதான இவர் வனவியல் ஆர்வலர் ஆவார். இவர் ஒரு மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த சாதனை தொடர்பான வீடியோவை உலக கின்னஸ் சாதனை நிறுவனம் இணையத்தில் பகிர்ந்துள்ளது. 

அதன்படி சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 19 மரங்களை கட்டிப்பிடித்துள்ளார்.

இந்த சாதனையானது டஸ்கெகி தேசிய வனப்பகுதியில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பகிரப்பட்ட இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 9 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலானது. அபுபக்கரின் சாதனைக்காக சமூக ஊடக பயனர்கள் அவரை பாராட்டினர்.

சாதனை பற்றி அபுபக்கர் கூறுகையில், இந்த உலக சாதனையை அடைவது நம்ப முடியாத அளவுக்கு வெகுமதி அளிக்கிறது. 

இது நமது சுற்றுச்சூழல் அமைப்பின் மரங்களின் முக்கிய பங்கை எடுத்து காட்டுவதற்கான ஒரு அர்த்தமுள்ள செயலாகும் என்றார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்