ஜி.வி பிரகாஷ்- சைந்தவி பிரிவிற்கு இதுதான் காரணமா..?
14 வைகாசி 2024 செவ்வாய் 10:50 | பார்வைகள் : 1449
பிரபல இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தன்னுடைய மனைவி சைந்தவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரியும், இசையமைப்பாளருமான ஏ.ஆர். ரஹெனாவின் மகன் ஜி.வி.பிரகாஷ் குமார். ஜெண்டில்மேன் படத்தில் வரும் குச்சி குச்சி ராக்கமா என்று தொடங்கும் பாடல் வரிகளை குழந்தை குரலில் பாடியது இவர்தான், வசந்தபாலன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இவரின் இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தன. இதன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்தார் ஜி.வி.பிரகாஷ்
சிறுவயதிலேயே சிறந்த பாடல்கள் கொடுத்ததன் மூலம் பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். இவரின் இசை ரசிகர்களை மிகவும் கவர்ந்ததன் காரணமாக புகழின் உச்சிக்கே சென்றார் ஜிவி பிரகாஷ். இந்த நிலையில், பள்ளி காலம் முதல், தான் காதலித்து வந்த தன்னுடைய தோழியும், பிரபல பாடகியுமான சைந்தவியை, பெற்றோர்கள் சம்மதத்துடன் 2013 ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பும், திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்களில் இணைந்து பாடல்கள் பாடியுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து பாடிய பல காதல் பாடல்கள் மிகப்பெரும் ஹிட் கொடுத்தது.
ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் இணைந்து பாடிய பாடல்கள் வெற்றியடைய, அவர்களுக்குள் இருந்த காதலும் முக்கிய பங்கு என ரசிகர்கள் உட்பட பலரும் கூறி வந்தனர். இவர்கள் இருவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ‘அன்வி’ என்ற பெண் குழந்தை பிறந்தது. ஜி.விபிரகாஷ் குமார் இசையமைப்பு மற்றும் நடிப்பு என கவனம் செலுத்தி வந்தார். அதேபோல் சைந்தவி இசை நிகழ்ச்சி, பின்னணி பாடுவது, இசைக்கென ஸ்டுடியோ தொடங்கியது என இருவரும் அவரவர் வேளையில் பிஸியாக இருந்தனர். இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான Bachelor படத்திற்கு பின் கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என சினிமா வட்டற்றத்தில் கிசுகிசுக்கப்பட்டது. அது முற்றிப்போக இருவரும் கடந்த ஆறு மாதங்களாக தனித்தனியே வசித்து வருகின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி ஆகியோர் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக இருவரும் பிரிந்து விட்டதாக இருவரும் தற்போது சமூகவலைத்தளத்தில் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த முடிவு இருவருக்கும் நன்மை தரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, ரசிகர்கள் உட்பட அனைவரும் தங்களின் முடிவுக்கு மதிப்பளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி பிரிவுக்கு இரு குடும்பத்தாருக்கு இடையே எழுந்த பிரச்னை காரணம் என சொன்னாலும், இன்னொரு முக்கியப் பிரச்னை இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும், சினிமா துறையில் காதல் திருமணம் செய்துகொண்ட மேலும் ஒரு ஜோடி பிரிந்துள்ளனர்.