பாலஸ்தீன ஆதரவாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை!
15 வைகாசி 2024 புதன் 13:44 | பார்வைகள் : 2821
பாலஸ்தீன மக்களிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை தீவிரப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் உள்ள பாலஸ்தீன ஆதரவாளர்கள் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
யுத்தத்தை குழப்புதல் என்ற அமைப்பு நக்பாவின் 76வது தினமான இன்று பாலஸ்தீனத்திற்காக உங்கள் நகரங்களை முடக்குங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
அராபிய மொழியில் நக்பா எனப்படுவது 1948ம் ஆண்டு அராபிய இஸ்ரேல் யுத்தத்தின்போது மிகப்பெருமளவில் பாலஸ்தீன மக்கள்தங்கள் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டதை குறிக்கின்றது .
இந்நிலையில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை தொடர்வதுடன் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தங்கள் பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அதை தொடர்ந்து எதிர்ப்பு குறைவதற்கு அனுமதிக்கவேண்டாம் , காசாவிற்காக எழுச்சிகொள்வோம் என யுத்தத்தை குழப்புதல் அமைப்பு சமூக ஊடகங்களில் தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.