குழந்தைகளின் Privacy -யை மதித்ததற்கு நன்றி...! Photographers -க்கு பரிசுகளை அனுப்பிய விராட் கோலி
16 வைகாசி 2024 வியாழன் 09:02 | பார்வைகள் : 1033
குழந்தைகளின் புகைப்படத்தை எடுக்காத புகைப்படக் கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்து பரிசு கொடுத்து விராட் கோலி -அனுஷ்கா தம்பதியினர் ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.
விராட் கோலி - அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து வாமிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
சமீபத்தில், லண்டனில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அங்கிருந்து மும்பைக்கு திரும்பினர். இந்நிலையில், தங்களுடைய மகனின் புகைப்படங்களை பொதுவெளியில் காட்டாமல் இருந்தனர்.
அதோடு, தங்களது வீட்டின் முன்பு கூடிய கலைஞர்களிடம் குழந்தைகளை புகைப்படம் எடுக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கிய போது அனுஷ்கா ஷர்மா தனது மகனை அழைத்து வந்து அறிமுகம் செய்தார். அதுவரை, புகைபடக்கலைஞர்களால் எந்த மீடியாவிலும் குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியிடப்படவில்லை.
இதனால், குழந்தைகளின் Privacy -யை மதித்ததற்கு நன்றி தெரிவித்து, Photographers -யை பாராட்டும் விதமாக விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியினர் பரிசுப்பொருட்களை அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து, Photographers ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர்கள் அனுப்பிய gift box -ல் ஸ்மார்ட் வாட்ச், பவர் பேங்க், சிறிய பேக் மற்றும் தண்ணீர் பாட்டில் இருந்துள்ளது, மேலும், நன்றி தெரிவிக்கும் கடிதம் ஒன்றை இருவரும் எழுதி அனுப்பியுள்ளனர்.