காஸாவிற்கு கடல் மார்க்கமாக நிவாரணப் பொருட்களை எடுத்து செல்லும் நடவடிக்கை
17 வைகாசி 2024 வெள்ளி 08:10 | பார்வைகள் : 1773
இஸ்ரேல் காசா பிரதேசத்தின் மீது பாரிய தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
காஸாவிற்கு கடல் மார்க்கமாக நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல, மிதக்கும் பாலம் ஒன்றை அமெரிக்கா கட்டி முடித்துள்ளது.
அமெரிக்க ராணுவ வீரர்களை நேரடியாக ஈடுபடுத்தாமல், இஸ்ரேல் ராணுவ பொறியாளர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் மூலம் மிதக்கும் பாலத்தை கட்டி முடித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதேவேளை பாலஸ்தீனர்களுக்கு உணவு பொருட்களை எடுத்து செல்லும் லாரிகளை இஸ்ரேலியர்கள் தடுத்து நிறுத்திவிடுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் இரண்டாயிரத்து 600 கோடி ரூபாய் செலவில்காஸாவிற்கு மிதக்கும் பாலத்தை கட்டியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.