Paristamil Navigation Paristamil advert login

"ஒன் சிப் சேலஞ்ச்” மாரடைப்பில் உயிரை விட்ட 14 வயது சிறுவன்

18 வைகாசி 2024 சனி 10:03 | பார்வைகள் : 3427


அமெரிக்காவில் 14 வயதான சிறுவன் கடந்த ஆண்டு சமூக வலைதள சவாலில் ஈடுபட்ட பின்னர் மாரடைப்பால் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸைச் சேர்ந்த ஹாரிஸ் வோலோபா (Harris Wolobah) என்ற 14 வயது டீனேஜர், "ஒன் சிப் சேலஞ்ச்”(One Chip Challenge) எனப்படும் சவாலில் ஈடுபட்ட பின்னர் செப்டம்பர் மாதம் உயிரிழந்தார். 

  Paqui நிறுவனம் தயாரித்த இந்த சிப்ஸ், Carolina Reapers மற்றும் Naga Vipers என்ற உலகின் காரமான மிளகுத்துள்களால் தூவப்பட்டிருந்தது. 

இந்த காரமான சிப்ஸ் பண்டத்தை சாப்பிட்டத்தன் விளைவாக ஹாரிஸ் வோலோபாவின் உயிர் பிரிந்து இருப்பது வியாழக்கிழமை வெளியான பிரேத பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் தலைமை மருத்துவ பரிசோதகர், ஹாரிஸ் மிளகாய்க்கு காரத்தை அளிக்கும் கலவையான கப்சைசின்(capsaicin) அதிக அளவு உள்ள உணவை உட்கொண்ட பிறகு மாரடைப்பு காரணமாக இறந்ததாக தீர்ப்பளித்தார், என்று AFP செய்தி நிறுவனத்தால் பார்க்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்துள்ளது.

ஹாரிஸின் இறப்பிற்கு பிறகு, Paqui நிறுவனம் சவப்பெட்டி வடிவ பெட்டியில் சிவப்பு மண்டை ஓடுடன் "அதீத காரம்" என்று குறிக்கப்பட்டிருந்த இந்த தயாரிப்புகளை கடை அலமாரிகளில் இருந்து நீக்கியது.

'ஒன் சிப் சேலஞ்ச்' என்பது சிப்ஸ் நிறுவனமான Paqui நிறுவனத்தால் ஒரு சந்தைப்படுத்தல் பிரச்சாரமாக 2016 இல் தொடங்கப்பட்ட ஒரு வைரல் சமூக ஊடக போக்கு.

மக்கள் காரமான மிளகு துள்களால் சுவை சேர்க்கப்பட்ட சிப்பை வாங்கி சாப்பிட்டு, பின் அந்த காரத்தை எவ்வளவு நேரம் தண்ணீர் அல்லது பால் ஆகியவை குடிக்காமல் தாக்குபிடிக்க முடியும் என்பதை ஆவணப்படுத்திக் கொள்ளும் முறையாகும். 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்