மூன்றாம் உலகப்போர் தொடர்பில் பகீர் கிளப்பும் டொனால்டு டிரம்ப்
19 வைகாசி 2024 ஞாயிறு 08:49 | பார்வைகள் : 2569
அமெரிக்க தலைமையின் திறமையின்மையால் மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் திகதி நடக்க உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், ஜோ பைடன் (Joe Biden) அரசை விமர்சித்து வரும் டொனால்டு டிரம்ப், தற்போது உலகப்போர் வெடிக்கலாம் என பகீர் கிளப்பியுள்ளார்.
Minnesota-வில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய டொனால்டு டிரம்ப் (Donald Trump), ''இன்றைய ஆயுத பலம் மிகவும் பயங்கரமாக இருப்பதால், இந்த நாட்டை நடத்தும் முட்டாள்களால் நிறைய பேர் எஞ்சியிருக்க மாட்டார்கள்.
திறமையற்றவர்கள் ஆட்சி நடத்துவதால் அடுத்த 5 மாதங்கள் உலகப்போரில் முடிவடையலாம். பாருங்கள் மிகவும் பலவீனமான நாடு நம்மிடம் உள்ளது. நம் நாட்டை முட்டாள்கள் வழி நடத்துகிறார்கள்.
நான் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்திருந்தால், ரஷ்யா-உக்ரைன் மோதல், மத்திய கிழக்கு மோதல் அல்லது அதிக பணவீக்கம் போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது'' என தெரிவித்தார்.