Paristamil Navigation Paristamil advert login

கனடாவில்  படகு விபத்து - 3 பேர் பலி

கனடாவில்  படகு விபத்து - 3 பேர் பலி

20 வைகாசி 2024 திங்கள் 09:41 | பார்வைகள் : 3378


கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் வடக்கு கிங்ஸ்டன் பகுதியில் விபத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு படகுகள் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஸ்பீட் போட் மற்றும் துடுப்பை பயன்படுத்தும் மீன்பிடிப் படகு ஒன்னும் மோதிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்தவர்கள் 21 வயது முதல் 44 வரையிலானவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்திற்கான காரணங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. 

வர்த்தக‌ விளம்பரங்கள்