Paristamil Navigation Paristamil advert login

நடந்து முடிந்த முதல் சுற்றில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

நடந்து முடிந்த முதல் சுற்றில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

1 ஆடி 2024 திங்கள் 09:03 | பார்வைகள் : 3716


நேற்றைய தினம் பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்று வாக்களிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் Rassemblement National (RN)கட்சியும் அதனை தாங்கிப்பிடித்த Les République( LR) கட்சியின் ஒரு பகுதியும் இணைந்து 33,15% வாக்குகளையும், Nouveau Front Populaire (NFP ) 28% வாக்குகளையும், Majorité présidentielle அல்லது Renaissance கட்சி  20,04%  வாக்குகளையும் பெற்றுள்ளன.

இந்த நிலையில் அடுத்த ஞாயிறு (07/07) இரண்டாம் சுற்று வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. இதில் முதலாம் சுற்றிலேயே 577 தொகுதிகளில் அதிகார பூர்வமான நாடாளுமன்ற உறுப்பினர்களாக (இரண்டாவது சுற்றுல் போட்டியிடாமல்) 75 உறுப்பினர்கள் முதல் சுற்றில் தெரிவாகியுள்ளனர் அவர்களில்,  Rassemblement National (RN) கட்சியின் உறுப்பினர்கள் 37 பேரும், Nouveau Front Populaire (NFP ) கட்சியின் 32 உறுப்பினர்களும், Renaissance கட்சியின் 2 உறுப்பினர்களும், RN கட்சியுடன் இணைந்த Les République கட்சியின் 1 உறுப்பினரும், தனித்த Les République கட்சியின் 1 உறுப்பினரும்,  Divers droite கட்சியின் 2 உறுப்பினர்களும், Extrême droite கட்சியின் 1 உறுப்பினரும் தெரிவாகியுள்ளனர்.

ஏனைய 502 நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கான இரண்டாம் சுற்று தேர்தலில் யார் யார் போட்டியிட இருக்கிறார்கள் எந்தெந்த கட்சியின் சார்பில் போன்ற தகவல்களை நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6:00 மணிக்கு முன்னர் அந்தந்த கட்சிகள் சமர்ப்பிக்க வேண்டும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்