Paristamil Navigation Paristamil advert login

புதிய தலைவர் கப்ரியல் அத்தால் தலைமையில் இன்று முதலாவது பொதுக்கூட்டம்..!!

புதிய தலைவர் கப்ரியல் அத்தால் தலைமையில் இன்று முதலாவது பொதுக்கூட்டம்..!!

15 ஆடி 2024 திங்கள் 08:17 | பார்வைகள் : 15816


ஜனாதிபதி மக்ரோனின் மறுமலர்ச்சி கட்சியின் (groupe Renaissance) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தலைவராக பிரதமர் கப்ரியல் அத்தால் அறிவிக்கப்பட்டதை அடுத்து, இன்று ஜூலை 15, திங்கட்கிழமை அவரது தலைமையின் கீழ் முதலாவது பொதுக்கூட்டம் இடம்பெற உள்ளது.

இன்று காலை 10.30 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெற உள்ளதாக அறிய முடிகிறது.

கடந்த சனிக்கிழமை தங்களது கட்சியினைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தலைவரை தேர்தெடுக்கும் பணி இடம்பெற்றது. இதில் கபிரியல் அத்தால், முன்னாள் பிரதமர் Élisabeth Borne உள்ளிட்டவர்கள் போட்டியிட்டனர். மொத்தமாக 98 பேரில் 84 பேர் கப்ரியல் அத்தாலுக்கு வாக்களித்ததில், அவர் புதிய தலைவராக தேர்ந்தெக்கப்பட்டிருந்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்