தேர்தலின் பின்னர் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்.. எலிசே மாளிகையில் இடம்பெறுகிறது!!
15 ஆடி 2024 திங்கள் 10:56 | பார்வைகள் : 2968
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலின் பின்னர் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை ஜூலை 16, செவ்வாய்க்கிழமை எலிசே மாளிகையில் கூடுகிறது.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இந்த கூட்டத்தை எலிசேமாளிகையில் கூட்டும்படி கோரியுள்ளார். முற்பகல் 11.30 மணிக்கு ஜனாதிபதி மக்ரோன் மற்றும் பிரதமர் கப்ரியல் அத்தால் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற உள்ளது.
இந்த கூட்டத்தின் போது பிரதமர் கப்ரியல் அத்தாலின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மக்ரோன் ஏற்றுக்கொள்ளுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.