LPL 2024: 7 சிக்ஸர்களுடன் 60 ரன் விளாசல்! Dambullaவை வேட்டையாடிய ஹசரங்கா அணி

16 ஆடி 2024 செவ்வாய் 08:07 | பார்வைகள் : 3094
தம்புள்ளை அணிக்கு எதிரான LPL 2024 போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கொழும்பில் நடந்த LPL 2024யின் 18வது போட்டியில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய கண்டி ஃபால்கன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 222 குவித்தது. ஆந்த்ரே ஃப்ளெட்சர் 34 பந்துகளில் 7 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 60 ஓட்டங்கள் குவித்தார்.
கமிந்து மெண்டிஸ் 24 பந்துகளில் 51 ஓட்டங்களும், ஏஞ்சலோ மேத்யூஸ் 23 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 44 ஓட்டங்களும் விளாசினர். ஹேமந்தா 3 விக்கெட்டுகளும், சோனல் தினுஷா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணியில் குசால் பெரேரா அதிரடியில் மிரட்ட, ஹென்றிக்ஸ் (2), இப்ராஹிம் (1), லஹிரு உதாரா (3), நபி (3) சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
சாப்மேன் 24 (19) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, குசால் பெரேரா அரைசதம் விளாசினார். 40 பந்துகளை சந்தித்த அவர் 5 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார்.
பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் கண்டி அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹசரங்கா 4 விக்கெட்டுகளும், ஷானகா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.