மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் மின் கட்டணம் எவ்வளவு?
17 ஆடி 2024 புதன் 03:11 | பார்வைகள் : 679
தமிழகத்தில் வீடு உட்பட அனைத்து பிரிவுகளுக்குமான மின் கட்டணம், 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கான மின் கட்டணம், மற்ற மாநிலங்களில் எவ்வளவு உள்ளது என்ற எதிர்பார்ப்பு, தமிழக மக்களிடம் எழுந்துள்ளது.
அதன் விபரம்:
மின் பயன்பாடு அதிகம் உள்ள முக்கிய மாநிலங்களில்
2 மாதங்களுக்கான மின் கட்டணம் - ரூபாயில்
-------------------------------------------------------------
மாநிலம்/ யூனிட்கள் - 100 - 200 - 300 - 400 - 500 - 600 - 700 - 800 - 900 - 1000
--------------------------------------------------------------------
தமிழகம் - கட்டணம் இல்லை - 235 - 705 - 1,175 - 1,805 - 2,880 - 3,825 - 4,770 - 5,820 - 6,870
கர்நாடகா - 846 - 1,662 - 2,508 - 3,114 - 3,960 - 4,806 - 5,652 - 6,258 - 7,344 - 7,950
கேரளா - 415 - 880 - 1,440 - 2,215 - 3,065 - 4,190 - 5,425 - 6,430 - 7,510 - 8,300
தெலுங்கானா - 215 - 545 - 1,220 - 1,700 - 2,890 - 3,680 - 4,600 - 5,500 - 6,490 - 7,440
மேற்கு வங்கம் - 594 - 1,324 - 2,122 - 2,866 - 3,681 - 4,496 - 5,472 - 6,394 - 7,424 - 8,346
குஜராத் - 571 - 1,157 - 1,763 - 2,414 - 3,065 - 3,871 - 4,637 - 5,403 - 6,219 - 6,985
மஹாராஷ்டிரா - 732 - 1,246 - 2,721 - 3,686 - 4,651 - 5,616 - 6,920 - 8,224 - 9,528 - 10,832
ராஜஸ்தான் - 935 - 1,585 - 2,235 - 3,060 - 3,795 - 4,530 - 5,435 - 6,200 - 6,965 - 7,730
ம.பி., - 575 - 1,220 - 1,777 - 4,190 - 4,885 - 6,060 - 7,494 - 8,208 - 9,962 - 10,676
* தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், அரசு மானியம் போக, நுகர்வோர் செலுத்த வேண்டிய தொகை தெரிவிக்கப்பட்டுள்ளது; அதன்படி, 100 யூனிட் பயன்படுத்தும் வீட்டிற்கு முற்றிலும் மின் கட்டணம் இலவசம் என்பதால், 480 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. 200 யூனிட் உள்ள வீடுகளில் முதல் 100 யூனிட் இலவசம், அடுத்த, 100 யூனிட்டிற்கு, 245 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதேபோல் முதல், 500 யூனிட் வரை மானியம் வழங்கப்படுகிறது. 500 யூனிட் மேல் உள்ள வீடுகளில், முதல், 100 யூனிட் மட்டும் இலவசம்; மீதியுள்ள யூனிட்களுக்கு, அதற்கு ஏற்ப நிர்ணயித்துள்ள மின் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
மற்ற மாநிலங்களும், குறைந்த மின் பயன்பாடு உள்ள வீடுகளுக்கு, 1 - 30, 30 முதல் 40 யூனிட் வரை என, ஒவ்வொரு பிரிவாக பிரித்து, அதற்கு ஏற்ப மானியம் வழங்குகின்றன.
அவ்வாறு மானியம் போக செலுத்தக்கூடிய கட்டண விபரம், மேற்கண்ட அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.