மெதுவாக சுற்ற ஆரம்பித்துள்ள பூமி - சுவிஸ் அறிவியலாளர்கள் கூறும் காரணம்
17 ஆடி 2024 புதன் 09:06 | பார்வைகள் : 590
பூமி சுழலும் வேகம் குறைய ஆரம்பித்துள்ளதாக சுவிஸ் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பூமி சுழலும் வேகம் குறையத் துவங்கியுள்ளதாக சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள ETH பல்கலை அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதற்கு பருவநிலை மாற்றமே காரணம் என்கிறார்கள் அவர்கள். அதாவது, புவி வெப்பமயமாதல் அதிகரித்துள்ளதால், துருவங்களிலுள்ள பனி உருகி, கடலில் நீர் அதிகரிப்பதால், பூமியின் சுழற்சியின் வேகம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள் அவர்கள்.
என்றாலும், காலண்டரில் மாற்றம் செய்யுமளவுக்கு பூமியின் வேகம் குறையவில்லை. பூமியின் வேகம் 100 ஆண்டுகளுக்கு 1.3 மில்லிசெகண்டுகள் மட்டுமே குறைந்துள்ளது.