Paristamil Navigation Paristamil advert login

மாட்டுக்கு 10 கிலோ தங்க சங்கிலி... 

மாட்டுக்கு 10 கிலோ தங்க சங்கிலி... 

17 ஆடி 2024 புதன் 09:21 | பார்வைகள் : 340


நம்மை ஆச்சரியப்படுத்தும் பல வீடியோக்கள் இணையத்தில் உலா வருகின்றன.

அந்த வகையில் எருமை மாட்டிற்கு 10 கிலோ தங்க சங்கிலியை அணிவிக்கும் ஒரு வீடியோ காட்சி, இன்ஸ்டாகிராமில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோவில் ஒரு முதியவர் நகைப் பெட்டியை திறக்கிறார்.

அதில் தடிமனான தங்கநிற சங்கிலி உள்ளது. அருகில் நிற்கும் நீல நிற உடை அணிந்த வாலிபர் அந்த சங்கிலியை எடுத்து, படுத்துக் கிடக்கும் எருமை மாட்டிற்கு அணிந்து விடுகிறார்.

இதை வலைத்தளத்தில் பதிவேற்றிய நபர், பசுமாட்டிற்கு 10 கிலோ தங்க சங்கிலி என்று குறிப்பிட்டு உள்ளார். வீடியோவில் எருமை மாட்டிற்கு சங்கிலி அணிவிக்கப்படுவதும், பதிவில் பசுமாடு என்று குறிப்பிட்டு இருந்ததும் வலைத்தளவாசிகளுக்கு சிரிப்பை வரவழைத்தது. மாடு கிடக்கும் தொழுவம் சிமெண்டு காரை பெயர்ந்து பழமையாக தோற்றமளிக்கிறது. இதையெல்லாம் குறிப்பிடும் வலைத்தளவாசிகள், அது போலியான தங்க சங்கிலி என்று கிண்டல் செய்தனர். உண்மையில் அது தங்க சங்கிலியாக இருந்தால், உங்கள் செல்வச் செழிப்பை காட்ட விரும்பினால் பாலஸ்தீன போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் என்றும் சிலர் குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த வீடியோ 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது. சுமார் 2 லட்சம் பேர் விருப்பப் பொத்தானை அழுத்தி உள்ளனர். இதேபோல வடக்கு கர்நாடகாவில் கடந்த 2021-ம் ஆண்டு ஒருவர் மாட்டிற்கு 20 கிராம் தங்கசங்கிலியை அணிவித்தார். வாழை இலையில் மற்ற பொருட்களுடன் வைத்து பூஜை செய்து அணிவித்த சங்கிலி, விழா முடிவில் மாயமானது. பின்னர் அது மாட்டின் வயிற்றில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இலையில் இருந்த உணவுப் பொருட்களுடன் சங்கிலியையும் மாடு விழுங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்