Paristamil Navigation Paristamil advert login

தளபதி 69 படத்தில் ரம்பா இணைகிறாரா?

தளபதி 69 படத்தில் ரம்பா  இணைகிறாரா?

18 ஆடி 2024 வியாழன் 09:21 | பார்வைகள் : 670


நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் நடிகர் விஜய்யை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் இன்று அதிகம் பகிரப்பட்டுள்ளன.

1990 களில் அதிக பிரபலமாக இருந்த நடிகைகளில் ரம்பாவும் ஒருவர். 1993 இல் வெளியான பிரபு நடித்த உழவன் திரைப்படத்தின் மூலம் அவர் அறிமுகம் ஆனார்.

ரஜினியுடன் அருணாசலம், கமலுடன் காதலா காதலா, விஜய்யுடன் என்றென்றும் காதல், நினைத்தேன் வந்தாய், மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருந்தார்.

கனடாவை சேர்ந்த இந்திர குமார் என்பவரை திருமணம் முடித்த ரம்பா பின்னர் அங்கேயே செட்டிலாகி விட்டார். இந்த தம்பதிக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

சமீப காலமாக சின்னத்திரை ஷோக்களில் நடுவராக இருந்து வந்தார். இந்நிலையில், விஜய்யை தனது குடும்பத்தினருடன் ரம்பா சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

இந்த சந்திப்பின்போது புதிய ஹேர்ஸ்டைலில் விஜய் காணப்பட்டார். அவர் தனது அடுத்த படத்திற்கு தயாராகுவதற்கு இந்த கெட்டப்புக்கு மாறியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே விஜய்யின் 69 ஆவது படத்தில் ரம்பா இணைந்திருப்பதகாவும், அதற்காகத்தான் இந்த சந்திப்பு நடந்தாகவும் இணையத்தில் தகவல் பரவியுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்