Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : RER நிலையத்துக்குள் நுழைந்த ஆயுததாரி...?? பயணிகள் வெளியேற்றம்..!!

பரிஸ் : RER நிலையத்துக்குள் நுழைந்த ஆயுததாரி...?? பயணிகள் வெளியேற்றம்..!!

18 ஆடி 2024 வியாழன் 15:30 | பார்வைகள் : 5372


இன்று வியாழக்கிழமை பிற்பகல் Nation நிலையத்தில், வெடிகுண்டு பொருத்தப்பட்ட உடையுடன் நபர் ஒருவர்  நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். 

ஜூலை 18, வியாழக்கிழமை பிற்பகல் 2.40 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மர்மநபர் ஒருவர் தொடருந்து நிலையத்துக்குள் வெடிகுண்டுகளுடன் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டு - Place de la Nation பகுதி முற்றுமுழுதாக வெளியேற்றப்பட்டது. காவல்துறையினர் குவிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் தேடப்பட்டது. வெடிகுண்டு அகற்றும் படையினரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால் ஆயுததாரி எவரும் கைது செய்யப்படவில்லை. குறித்த தகவல் பொய்யானது எனவும், அப்படியான நபர் ஒருவர் அங்கு வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காவல்துறையினரின் நடவடிக்கை பிற்பகல் 3.40 மணிக்கு நிறைவுக்கு வந்தது. போக்குவரத்துக்கள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்