Paristamil Navigation Paristamil advert login

சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடம் - எதிர்ப்பு தெரிவிக்கும் பிரபல நாடுகள்

சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடம்  - எதிர்ப்பு தெரிவிக்கும் பிரபல நாடுகள்

1 புரட்டாசி 2023 வெள்ளி 09:51 | பார்வைகள் : 6448


சீனா வெளியிட்ட புதிய வரைபடத்தை  வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளும் குறித்த வரைப்படத்தை நிராகரித்துள்ளன.

சீனா தங்கள் பிரதேசத்தை உரிமை கொண்டாடுவதாகக் குறிப்பிட்டுள்ள இந்த நாடுகள், எல்லைகளை தவறாகச் சித்தரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

கடந்த திங்கட்கிழமை சீனா வெளியிட்ட புதிய வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் குறிப்பிட்ட பகுதிகள், அக்சாய் சின் உள்ளிட்ட இந்தியப் பகுதிகள் உள்ளடக்கப்பட்டிருந்தது.

மேலும் பிலிப்பைன்ஸ் கடல் பகுதி, தென்சீனக் கடலில் குறிப்பிட்ட பகுதிகளும் இணைக்கப்பட்டிருந்தன.

இதைத் தொடர்ந்த புதிய வரைபடத்தில் எந்த அடிப்படையும் இல்லை என்று மறுத்துள்ள இந்திய வெளியுறவுதுறை அமைச்சகம் அதனை ஏற்க மறுத்து விட்டது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்