பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட கத்திகள்
1 புரட்டாசி 2023 வெள்ளி 10:03 | பார்வைகள் : 6912
பிரித்தானியாவில் ஜாம்பி கத்திகள், பட்டாக்கத்திகள் போன்ற சில வகை கத்திகளுக்குத் தடை விதிக்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு, ஜூன் மாதம், 29 ஆம் திகதி, ரோனன் கந்தா (Ronan Kanda, 16) என்ற பதின்ம வயது சிறுவன் இங்கிலாந்திலுள்ள Lanesfield என்ற இடத்தில் வைத்து வாளால் குத்தப்பட்டான்.
தகவலறிந்து வந்த மருத்துவ உதவிக் குழுவினரால் அவனைக் காப்பாற்ற முடியாத நிலையில் உயிரிழந்துள்ளான.
இந்நிலையில் பிரதமர் ரிஷியை சந்தித்த ரோனனின் தாயாகிய பூஜா.
இதுபோன்ற பயங்கர கத்திகள், வாள்கள் மக்களை கொலை செய்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், அவற்றின் விற்பனை ஏன் தடை செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார் அவர்.
தற்போது, பிரித்தானியாவில், ஜாம்பி கத்திகள், பட்டாக்கத்திகள் போன்ற சில வகை கத்திகளுக்குத் தடை விதிக்க திட்டமிடப்பட்டுவருகிறது.
ஆனால், தடை பட்டியலில், தன் மகனைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட வாள் இல்லை என்பதால் ஏமாற்றமடைந்துள்ளார் ரோனனின் தாயாகிய பூஜா.
கத்திக்குத்து குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த அரசு ஒரு சிறு அடி எடுத்து வைத்துள்ளது.
அது போதாது, பெரிய நடவடிக்கை தேவைப்படுகிறது என்று கூறியுள்ள பூஜா, குற்றங்களைக் கட்டுபடுத்தும் துறை அமைச்சரை தான் சந்தித்தபோது, அவர் தடை பட்டியலில் அந்த வாள் இருப்பதை உறுதி செய்வதற்காக தனது மகனைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட வாளைக் குறித்து கேட்டதாகவும், ஆனால் தற்போது பட்டியலில் அந்த வாள் இல்லை என்றும் கூறியுள்ளார்.
எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்காக நடவடிக்கை எடுப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கூறியுள்ள பூஜா, ஆனால், அரசு அதை தவறவிட்டுவிட்டது என்கிறார்.