புற்றுநோய் தொடர்பில் சுவிஸ் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு
19 ஆடி 2024 வெள்ளி 10:45 | பார்வைகள் : 1444
சுவிட்சர்லாந்தின் சூரிச் பல்கலை அறிவியலாளர்கள் குழு ஒன்று, உடலிலுள்ள சாதாரண செல்கள் புற்றுநோய் செல்களாக மாறுவதைத் தெரியப்படுத்தும் ஒரு சமிக்ஞை வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
உடலின் மேல் பரப்பில், அல்லது, உடலுக்குள் மென்மையான செல்களின் மேல் பரப்பில் காணப்படும் வழவழப்பான அடுக்கில் உள்ள எப்பித்தீலியல் செல்கள் என்னும் செல்கள் புற்றுநோய் செல்களாக மாறுவதை கட்டுப்படுத்தும் சமிக்ஞை பாதையைத்தான் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
புற்றுநோய் அதிகரிக்கும்போது, இந்த செல்கள், தங்களுக்கென ஒரு திட்டத்தை வகுக்கத் துவங்கி, நல்ல செல்களுக்குள் நுழையும் செல்களாக மாறுவதாக இந்த அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்தக் கண்டுபிடிப்பு, தோல் புற்றுநோய், பெருங்குடல், சிறுநீர்ப்பை மற்றும் தொண்டை புற்றுநோயை அதன் ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, விரைவாக சிகிச்சையை துவக்க பெரிதும் உதவியாக இருக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.