'Vilac' எனும் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த 'Paris 2024' தண்ணீர் குடுவைகளை பயன்படுத்த வேண்டாம்.
20 ஆடி 2024 சனி 06:23 | பார்வைகள் : 4433
தண்ணீர், குளிர்பானங்கள் போன்றவற்றை எடுத்துச் செல்லும் குடுவைகளில், வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் இலச்சினைகளைப் பயன் படுத்தி 'Paris 24' என 'Vilac' நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த குடுவைகளில், அவற்றை தயாரிக்கும் போது உயிராபத்தை ஏற்படுத்தும் 'Bisphenol A' எனும் பதார்த்தம் கலக்கப்பட்டுள்ளதால் அவற்றை பாவனைக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும், வாங்கிய கடைகளில் அவற்றை கொடுத்து மீள பணத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் பிரான்சின் அரச அமைப்பான 'Rappel Conso' எச்சரிக்கை விடுத்துள்ளது.
'Bisphenol A' பதார்த்தம் கலந்து செய்யப்படும் குழந்தைகள் பயன்படுத்தும் பால் புட்டிகள், தண்ணீர் எடுத்து செல்லும் குடுவைகள் 2015ம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டிருந்தாலும் பல நிறுவனங்கள் தொடர்ந்து அவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.குறித்த கெமிக்கல்ஸ் பதார்த்தம் பிளாஸ்டிக் பதார்த்தத்துடன் கலக்கும் போது மார்பக புற்றுநோய், கருவுறாமை புற்றுநோய் போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன என ஏற்கனவே சுகாதார துறை அறிவித்து அந்த பதார்த்தத்திற்கு தடை விதித்திருந்தது.
எனவே மேலே தரப்பட்ட படத்தில் இருக்கக்கூடிய குடுவைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் கொள்வனவு செய்த இடத்தில் கொடுத்து மீண்டும் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.