துபாயில் வெப்பநிலை அதிகரிப்பால் காத்திருக்கும் அபாயம் - விஞ்ஞானிகள் கணிப்பு
20 ஆடி 2024 சனி 08:51 | பார்வைகள் : 2051
துபாயில் நிலவி வரும் அதிக வெப்பம் நிலையானது மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
துபாயில் தற்போது, ஈரப்பதம் (Humidity) மற்றும் வெப்பம் அதிகமாக உள்ளது.
ஜூலை 17 அன்று, வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸை எட்டியது. இன்று (வெள்ளிக்கிழமை) வெப்பநிலை 62 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.
துபாயில் வெப்பநிலை மனித உடலின் சகிப்புத்தன்மையை தாண்டிவிட்டதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதிக ஈரப்பதம் மற்றும் அதிக வெப்பம் காரணமாக மனிதர்கள் உயிர் பிழைப்பது ஆபத்தான நிலையை எட்டும் என்று கூறப்படுகிறது.
வெட்-பல்ப் வெப்பநிலை என அழைக்கப்படும் இந்த வெப்பநிலை 6 மணி நேரத்திற்கும் மேலாக 35 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் இருக்க வேண்டும், இல்லையெனில் அது ஆபத்தானது.
அண்மைக்காலமாக நிலவும் வெப்பச்சலனம் காரணமாக மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. உஷ்ண சம்பந்தமான நோய்களில் கவனமாக இருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் ஏசிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால், மின் நுகர்வு வெகுவாக அதிகரித்துள்ளது. மேலும், இந்த வெப்பம் அக்டோபர் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.