Paristamil Navigation Paristamil advert login

மஹா.,வில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல், 160 தொகுதிகளில் போட்டி: பா.ஜ., திட்டம்

மஹா.,வில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல், 160 தொகுதிகளில் போட்டி: பா.ஜ., திட்டம்

21 ஆடி 2024 ஞாயிறு 08:16 | பார்வைகள் : 815


மஹாராஷ்டிராவில் வரும் சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு உள்ள பா.ஜ., முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்காமல் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மஹாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பாஜ.,வின் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்து வந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவி வகித்து வருகின்றனர். எதிர்க்கட்சியான ‛ மஹா விகாஸ் அகாதி' கூட்டணியில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, காங்கிரஸ், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 288 தொகுதிகள் கொண்ட இம்மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், எதிர்க்கட்சி கூட்டணி 30 தொகுதிகளிலும், பாஜ., கூட்டணி 17 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

இதனையடுத்து வரும் சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பா.ஜ., தீவிரமாக உழைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இம்முறை 160 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு உள்ள பா.ஜ., முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்காமல் தேர்தலை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் தொகுதிகள் ஒதுக்கப்படும் எனவும் அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்