Sniffy : உற்சாக மருந்துக்கு தடை..!!
25 ஆடி 2024 வியாழன் 13:07 | பார்வைகள் : 3516
Sniffy என அழைக்கப்படும் உற்சாக மருந்துக்கு பிரான்சில் விற்பனைத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மூக்குப்பொடி போன்று மூக்கு வழியாக உறிஞ்சும் இந்த மருந்து, உடலுக்கு உடனடியான உற்சாகத்தை தருகிறது. குறித்த மருந்து உடலுக்கு எவ்வித தீங்கையும் தராது என்றபோதும், அதனை பயன்படுத்தும் விதத்துக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
'கொக்கைன்' போதைப்பொருள் உட்கொள்ளுவதை இது ஞாபகப்படுத்துவதாகவும், இளைஞர்கள் அதனை கொக்கைன் போன்று உருவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள் எனவும் குற்றம் சாட்டப்பட்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் Catherine Vautrin, இந்த தடை தொடர்பில் நேற்று ஜூலை 24 புதன்கிழமை அறிவித்தார். கடந்த பல மாதங்களாக சந்தையில் விற்பனையில் இருக்கும் இந்த Sniffy உற்சாக மருந்து, இளைஞர்களிடையே நவீன மோகப்பொருளாக மாறியுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.