ஐசிசியின் விதியை மீறிய வீரர்..அதிரடி அபராதம் விதிப்பு
30 ஆடி 2024 செவ்வாய் 09:48 | பார்வைகள் : 524
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் விதியை மீறிய அயர்லாந்து வீரருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
Belfastயில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் அயர்லாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடும்போது, துடுப்பாட்ட வீரர் ஹரி டெக்ட்டர் ஐசிசி விதியை மீறினார்.
அவர் நடத்தை விதிகளின் லெவல் 1ஐ மீறினார். அதாவது, கீப்பர் கேட்ச் ஆனதாக நடுவர் அவுட் கொடுத்தபோது, டெக்ட்டர் ஆட்சேபனை எழுப்பி மைதானத்தை விட்டு வெளியேறுவதை தாமதப்படுத்தினார்.
மேலும் போட்டி அதிகாரி குறிப்பிட்டது போல், அவர் நடுவரிடம் சைகை செய்தார். இதன் காரணமாக அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.