கவர்னர் ரவி பதவி நீட்டிப்பு? பதில் சொல்ல முதல்வர் ஸ்டாலின் மறுப்பு
1 ஆவணி 2024 வியாழன் 03:19 | பார்வைகள் : 5619
கவர்னர் ரவிக்கு பதவி நீட்டிப்பு கொடுப்பது பற்றிய கேள்விக்கு பதில் சொல்ல, நான் ஜனாதிபதியும் அல்ல; பிரதமரும் அல்ல,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
வயநாடு நிலச்சரிவு குறித்து, கேரள முதல்வரிடம் பேசினேன். 'சேதாரத்தை இன்னும் கணக்கெடுக்க முடியவில்லை. மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார். தமிழக அரசின் சார்பாக, எந்த உதவிகளும் செய்வதாக சொல்லி இருக்கிறோம்.
இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில், மருத்துவக் குழு அனுப்பி உள்ளோம். தமிழக அரசு சார்பில், ஐந்து கோடி ரூபாய் அனுப்பி உள்ளோம். தேவைப்பட்டால் இன்னும் உதவிகள் செய்வதாக தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
'கவர்னரின் பதவி காலம் முடியப் போகிறது. அவருக்கு மீண்டும் கவர்னர் பதவி கொடுக்க வாய்ப்புள்ளதாக சொல்கின்றனரே' என்ற கேள்விக்கு, முதல்வர் ஸ்டாலின், ''நான் ஜனாதிபதியும் இல்லை; பிரதமரும் இல்லை,'' என பதிலளித்தார்.
பார்லிமென்டில் ராகுல் ஜாதி குறித்து பேசியது பற்றிய கேள்விக்கு, ''இது இப்போது கேட்க வேண்டிய கேள்வி இல்லை,'' என்றார்.

























Bons Plans
Annuaire
Scan