Roissy-Charles-de-Gaulle விமான நிலையத்தின் அருகே தீப்பிடித்து எரிந்த பேருந்து!
1 ஆவணி 2024 வியாழன் 07:39 | பார்வைகள் : 2486
Roissy-Charles-de-Gaulle விமான நிலையம் அருகே பயணிகள் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 31, நேற்று புதன்கிழமை மாலை 4 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானநிலையத்துக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. பாரிய கரும்புகை வானில் பரவியது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
விமானநிலையத்தில் இருந்த பயணிகளால் இந்த புகையினை பார்க்கக்கூடியதாக இருந்ததாக பலர் தெரிவித்தனர்.