நல்ல தாம்பத்யம் என்றால் என்ன.,.?
1 ஆவணி 2024 வியாழன் 09:39 | பார்வைகள் : 667
தாம்பத்தியம் என்னும் அறம்..கணவன் மனைவி இருவரும் இணைந்து சேர்ந்து வாழ்வதற்கான ஒரு காரணம்..வரையறை மனதால்..உள்ளத்தால்..இதயத்தால் இணைந்து பின்பு உடலால் இணைவதே அழகான தாம்பத்தியம்..
காதல் இருவரையும் இணைக்கும் பாலமாக கருவியாக இருப்பது..மனதின் மொழியையும்..உடலின் மொழியையும்.. இருவரும் ஒரு சேர உணர்ந்து..வாழ்க்கையின் பொன்னான தருணங்களில்..ஒருவர் சூரியனாகவும்…மற்றொருவர் சந்திரனாகவும்..மாறி மாறி பிரகாசித்து இல்லறத்தை நல்லறமாக பேணி பாதுகாத்து..உறவுகள் சூழ..பேரின்பம் பெற்று..ஒருமித்த மனதுடன் வாழும் வாழ்க்கையே சிறந்த தாம்பத்தியம்..
கணவன் மனைவி இன்புற்று வாழ இருவர் மட்டுமே..பிரதானம்..குழந்தைக்காக வாழ்கிறேன்..பெற்றோருக்காக பார்க்கிறேன்..என்று ஒருவருக்கு ஒருவர் தியாகம் செய்யாமல் இருவரும் புனிதமான தாம்பத்தியத்தின் சிறப்பை மேன்மையை உணர்ந்து..செயல் பட வேண்டும்..
அன்பு நேசம் பாசம் காதல் காமம்..இளமையில் தொடரும்..இந்த காதல் யுத்தங்கள்..இதழ் பிரியா சத்தத்தோடு..முதுமையிலும் அதே விலகாத பிரியத்துடன் தொடர வேண்டும்..தொடர்ந்தால்.அதுவே உண்மையான தாம்பத்தியம்..
காதல் செய்யுங்கள் உங்கள் சொந்த மனைவியை.. காதல் செய்யுங்கள் உங்கள் சொந்த கணவரை..நம் உறவைத் தவிர வேறு சிறந்த பெரிதான உறவு இல்லை என்று எண்ணுங்கள்..
உடல் மற்றும் இல்லை..தூயவுள்ளமும் தேவை என்று உணருங்கள் காமம் மற்றும் அல்ல..காதலும் தேவை என்று நினையுங்கள் ..கூடல் மட்டுமல்ல ஊடலும் தேவை என்று தெளிவு கொள்ளுங்கள்..தாம்பத்தியம் என்னும் சொல்லைத் தக்க வைக்க ஆயிரம் முயற்சி செய்ய வேண்டும்..அதை அழிக்க ஒரு வார்த்தை போதும் என்ற பலவீனத்தை புரிந்து கொள்ளுங்கள்..இல்லறம் என்னும் நல்லறம் இனிக்கட்டும்..கரும்பாய்..