'கோட்' படத்தில் வெங்கட்பிரபுவின் ஆஸ்தான நடிகையா?
2 ஆவணி 2024 வெள்ளி 13:05 | பார்வைகள் : 959
தளபதி விஜய் நடித்துள்ள ’கோட்’ திரைப்படத்தில் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகை ஒரு சின்ன கேரக்டரில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’கோட்’ திரைப்படத்தில் ஏற்கனவே சினேகா, லைலா ,மீனாட்சி சவுத்ரி ஆகிய மூன்று நாயகிகள் நடித்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் ஒரு கேரக்டரில் அஞ்சனா கீர்த்தி நடித்துள்ளதாக தகவல் வழியாக உள்ளன.
இவர் ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’சென்னை 28 ’, ’மாநாடு’ மற்றும் ’மன்மத லீலை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பதும் வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவான ’ஆர்கே நகர்’ திரைப்படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த படத்தில் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்கள் நடிகர்களான வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் நிலையில் தற்போது அஞ்சனா கீர்த்தியும் நடித்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவருக்கு என்ன கேரக்டர் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.