பூமியை நோக்கி வரும் 5 சிறுகோள்கள்? நாசா கூறிய விடயம்
7 ஆடி 2024 ஞாயிறு 09:54 | பார்வைகள் : 944
அடுத்த 10 நாட்களில் 5 சிறிய கோள்கள் பூமியை நோக்கி வருவதாக நாசா கணித்துள்ளது.
சமீபத்தில் நாசாவின் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க்கின் கோல்ட்ஸ்டோன் கிரகரேடார், 2024 MK மற்றும் 2011 UL21 ஆகிய இரண்டு சிறுகோள்கள் பூமியை பாதுகாப்பாக கடந்து சென்றதை கவனித்தது.
எனினும், அவற்றால் பூமிக்கு ஆபத்து ஏற்படாது என்றும், பூமியில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் கடந்து செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாசா விஞ்ஞானிகள் சிறுகோள்களின் பாதைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அவை 50 முதல் 240 அடி வரை விட்டம் கொண்டவை என்று கூறப்படுகிறது. அவற்றில் 5 சிறுகோள்கள் பூமியை கடந்து வரும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் லேபரட்டரியில் உள்ள டாஷ்போர்டின் படி, குறித்து சிறுகோள்கள் சூலை 8 முதல் சூலை 16 வரை கடக்கும் என்கின்றனர்.
முதல் சிறுகோள் 2024 MT1 சூலை 8ஆம் திகதி 9,36,000 மைல் தொலைவிலும், இரண்டாவது சிறுகோள் 2024 ME1 பூமியில் இருந்து 2,700,000 மைல் தொலைவில் சூலை 10 அன்று கடந்து செல்லும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் 2022 YS5 என்று பெயரிடப்பட்டுள்ள சிறுகோள் 2,620,000 மைல் தொலைவில் சூலை 11ஆம் திகதி நெருங்கி வந்து செல்லும். NG எனும் சிறுகோள் 22,140,000 மைல்கள் கடந்து சூலை 13ஆம் திகதி செல்லும்.
BY15 என்ற சிறுகோள் சூலை 16ஆம் திகதி பூமியில் இருந்து 3,850,000 மைல்களுக்குள் கடந்து செல்லும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.