Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : 20 ஆம் வட்டாரத்தில் கத்திக்குத்து தாக்குதல்..!

பரிஸ் : 20 ஆம் வட்டாரத்தில் கத்திக்குத்து தாக்குதல்..!

8 ஆடி 2024 திங்கள் 08:37 | பார்வைகள் : 7569


பரிஸ் 20 ஆம் வட்டாரத்தின் Charonne பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கத்திக்குத்து தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

rue Avron வீதியில் உள்ள உணவகம் ஒன்றின் முற்றத்தில் (terrace) அமர்ந்திருந்த ஒருவரை, மற்றொரு நபர் கத்தியால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.

தாக்குதல் சம்பவம் குறித்த உணவகத்தின் கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. அதனை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடியுள்ள தாக்குதலாளி தேடப்பட்டு வருகிறார்.

தாக்குதலுக்குரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அதேவேளை, காயமடைந்த நபர் பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள Pitié-Salpêtrière மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்