Paristamil Navigation Paristamil advert login

இந்தியன் 2’ திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா?

இந்தியன் 2’  திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா?

10 ஆடி 2024 புதன் 14:19 | பார்வைகள் : 659


கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் இன்று நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 இந்தியன் படம் உருவாக்கும் போது ராஜேந்திரன் என்பவர் கமல்ஹாசனுக்கு வர்மக்கலையை கற்றுக் கொடுத்தார் என்றும் அதற்காக அவரது பெயரும் அந்த படத்தின் டைட்டிலில் இடம் பெற்று இருந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
ஆனால் ராஜேந்திரன் கற்றுக்கொடுத்த வர்மக்கலையை இந்தியன் 2 படத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அதற்காக தன்னிடம் அனுமதி வாங்கவில்லை என்றும் ராஜேந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தால். 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது கமல்ஹாசன் தரப்பிலும் சுபாஷ்கரன் தரப்பிலும் யாரும் ஆஜராகவில்லை. இதனை அடுத்து சுபாஸ்கரன், கமல்ஹாசன் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்றால் அவர்கள் தரப்பு வாதத்தை கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியன் 2 தரப்படும் திட்டமிட்டபடி வெளியாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்