அரைத்த இறையியல் கிருமிகள் சமைக்கும் முன் அவதானம். RappelConso இணையத்தளம்.
12 ஆடி 2024 வெள்ளி 10:57 | பார்வைகள் : 3149
பிரான்சில் அதிகப்படியான பல்பொருள் அங்காடிகளைக் கொண்ட Leclerc, Netto, Cora, E. coli போன்ற கடைகளில் விற்பனை செய்யப்பட்ட அரைத்த இறைச்சி 500 கிராம் தட்டுகளில் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கிருமிகள் இருப்பது கண்டறியப்பட்டது, பிரான்ஸ் முழுவதும் அவை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை 15/07 வரை காலாவதியாகும் திகதியை கொண்ட அரைத்த இறைச்சி தட்டுகள் மீண்டும் திரும்பப் பெறப்பட்டு வருகிறது. என பிரான்ஸ் சுகாதார மையம் அறிவித்துள்ளது.
குறித்த அரைத்த இறைச்சியை உட்கொண்டால் வயிற்றுப்போக்கு, இரத்த அழுத்த அதிகரிப்பு, வயிற்று வலி, காய்ச்சலுடன் கூடிய வாந்தி, போன்றவையும், அதிலும் குழந்தைகளுக்கு கடுமையான சிறுநீரக சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் அரசாங்க இணையதளம் குறிப்பிடுகிறது.