இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர் இவரா?
24 ஆவணி 2024 சனி 15:02 | பார்வைகள் : 2156
ஜூலை 2024க்கான இந்தியாவின் அதிக பிரபலமான நடிகர்கள் பட்டியலை Ormax மீடியா வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரபாஸ் முதலிடம் பிடித்துள்ளார். ரெபல் ஸ்டார் என்று அழைக்கப்படும் பிரபால் தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.
சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ் என அடுத்தடுத்து தோல்விகளையும் சந்தித்து வந்த பிரபாஸ் சலார் படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கல்கி 2898 ஏடி படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த நிலையில் ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோரை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகராக பிரபாஸ் உருவெடுத்துள்ளார்.
பிரபாஸ் கடைசியாக கல்கி 2898 AD படத்தில் நடித்திருந்தார். கடந்த ஜூன் மாத இறுதியில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதுடன் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்தது. ரூ.1100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடித்திருந்தனர். கல்கி படத்தின் பிரபாஸின் தோற்றம் ஜோக்கர் போல இருந்ததாக பிரபல நடிகர் அர்ஷத் வார்சி விமர்சித்திருந்தார்.
அவரின் இந்த கருத்து சமூக வலைதலங்களில் பெரும் புயலை கிளப்பியது. பிரபாஸுக்கு ஆதரவாகவும் அவருக்கு எதிராகவும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர். இந்த சர்ச்சைக்கு மத்தியில் தற்போது இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர் பட்டியலில் பிரபாஸ் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் நடிகர் விஜய் 2-வது பிடித்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வரும் விஜய் கடைசியாக லியோ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தாலும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. விஜய்யின் அடுத்த படமான கோட் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது.
ஷாருக்கான் 3-வது இடத்திலும், மகேஷ் பாபு 4-வது இடத்திலும், ஜூனியர் என்டிஆர் 5-வது இடத்திலும் உள்ளனர். 6-வது இடத்தில் அக்ஷய் குமாரும், 7-வது இடத்தில் அல்லு அர்ஜுனும், 8-வது இடத்தில் சல்மான் கானும் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவின் மிகவும் பிரபலமான டாப் 10 நடிகர்கள் பட்டியலில் ராம் சரண்வது இடத்திலும், அஜித் குமார் 10-வது இடத்திலும் இருக்கின்றனர்.