Paristamil Navigation Paristamil advert login

ரஷ்ய அதிபரை கைது செய்ய ஆர்வம் காட்டும்  சர்வதேசம்

 ரஷ்ய அதிபரை கைது செய்ய ஆர்வம் காட்டும்  சர்வதேசம்

4 புரட்டாசி 2024 புதன் 15:12 | பார்வைகள் : 1519


ரஷ்யா நாடானது உக்ரைன் மீது போர் தாக்குதலை தொடங்கியதில் இருந்து சர்வதேச நாடுகள் ரஷ்யா மீது பல தடைகளை விதித்து வருகின்றது. 

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில் அந்த நீதிமன்றில் உறுப்பினராக உள்ள மங்கோலியா(Mongolia) நாட்டிற்கு ரஷ்ய(russia) ஜனாதிபதி புடின்(Vladimir Putin) சென்றுள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் (ukraine)இடையே போர் நீடித்து வருகிறது. இப்போர் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராக நெதர்லாந்தில் (netherland)உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உக்ரைனில் இருந்து குழந்தைகளை கடத்தியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் புடின் மீது கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு புடின் பயணம் மேற்கொண்டால் அந்த நாடு புடினை கைது செய்யும் வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளது.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் இன்று மங்கோலியா சென்றுள்ளார். மங்கோலியா சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உறுப்பினராக உள்ள நிலையில் புடினின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

மங்கோலியா சென்ற ரஷ்ய ஜனாதிபதி புடினை அந்நாட்டு ஜனாதிபதி உக்னங்இன் குர்ரில்சுக் நேரில் சென்று வரவேற்றார். அதன்பின்னர், இருநாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்