அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு ! 4 பேர் பலி
5 புரட்டாசி 2024 வியாழன் 04:19 | பார்வைகள் : 997
அமெரிக்கா - ஜியார்ஜியாவின் உள்ள உயர்நிலை பாடசாலையில் மர்ம நபர் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியார்ஜியாவின் பாரோ கவுண்டி மாகாணத்தில் , அப்பலாஜி என்ற இடத்தில் உள்ள உயர்நிலை பாடசாலை மீதே மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளார்.
இச்சம்பவம் 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை பொலிஸார் சுற்றிவளைத்து பிடித்ததாகவும் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் பாடசாலை மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் சில ஆண்டுகளாகவே பள்ளிக்கூடத்தில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன.