வெளிநாடு ஒன்றில் கைதாகி விடுதலையான 24 இலங்கையர்கள்
4 ஆவணி 2024 ஞாயிறு 15:24 | பார்வைகள் : 1178
குவைத்தில் கைதான 24 இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த 24 இலங்கையர்களும் கடந்த 2ஆம் திகதி அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
'அக்கரையில் நாம்' என்ற அமைப்பின் குவைத் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் குறித்த இலங்கையர்கள் கைதானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உரிய அனுமதியின்றி இசைநிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் இசைக்கலைஞர்களும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது