வடகொரியா நாட்டு ஒலிம்பி வீரர்கள் தொடர்பில் வெளியாகியு அதிர்ச்சி தகவல்
5 ஆவணி 2024 திங்கள் 08:18 | பார்வைகள் : 1873
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக வருகை தந்த வடகொரிய விளையாட்டு வீரர்கள் ஒவ்வொரு நொடியும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
2016 ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்கி தற்போது முதன்மையான அனைத்து சர்வதேச களத்திலும் வடகொரிய வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளின் போது கொவிட் காரணமாக தங்கள் நாட்டு அணியை அனுப்ப வடகொரியா தவறிய நிலையில்,2022ல் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் இருந்து தடை செய்யப்பட்டது.
அதன் பின்னர் தற்போது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரிய வீரர்கள் களம் கண்டுள்ளனர்.
வடகொரியாவில் இருந்து வெளியேறி, தற்போது பிரித்தானியாவில் வசிக்கும் Jy Hyun Park வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகொரிய அணியின் ஒவ்வொரு நகர்வுகளும் கண்காணிக்கப்படுவதுடன், அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஒவ்வொரு நாளும் அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்படும்.
போட்டிகளில் தவறிழைக்கும் வீரர்களுக்கு தண்டனை உறுதி, அரசியல் கைதியாகவும் அவர்கள் பார்க்கப்படலாம் என்கிறார் Jy Hyun Park.
தற்போது பாரீஸ் போட்டிகளுக்காக சென்றுள்ள 16 வீரர்களும் நாடு திரும்பிய பின்னர்,
பாரீஸ் நகரில் அவர்கள் கண்ட காட்சிகள் அல்லது அனுபவித்த விருந்தோம்பல் தொடர்பில் எதையும் வெளியிடக் கூடாது என்ற கட்டுப்பாடும் விளையாட்டு வீரர்களுக்கு உள்ளது.
நாடு திரும்பியதும் அவர்கள் அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுவார்கள் அல்லது சில நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டு வீரர்களிலேயே உளவாளிகள் இருக்கலாம் என்றும், ரகசிய பொலிசாரால் கவனிக்கப்படுவது இவர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும், பெரும்பாலும் மூளைச்சலவை செய்யப்பட்ட வீரர்களையே வடகொரியா சர்வதேச போட்டிகளுக்கு அனுப்பும் என்றும் Jy Hyun Park தெரிவித்துள்ளார்.