Paristamil Navigation Paristamil advert login

வங்கதேசத்தில் பிரதமர் பதவி விலக வலுக்கும் போராட்டம்

வங்கதேசத்தில் பிரதமர் பதவி விலக வலுக்கும் போராட்டம்

5 ஆவணி 2024 திங்கள் 08:11 | பார்வைகள் : 1182


வங்கதேசத்தில் ஞாயிற்று கிழமை மட்டும் 98 பேர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தொடரும் வன்முறைகளுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

ஒரு மாதம் முன்னர், பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வங்கதேச தெருக்களில் ஒலித்திருந்தால், நிலைமை வேறுவகையில் மாறியிருக்கும்.

 ஆனால் 76 வயதான பிரதமர் ஷேக் ஹசீனா தற்போது மிக நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு வருகிறார்.

மட்டுமின்றி வங்கதேசம் முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களால் மேலும் வன்முறை வெடிக்கக்கூடும் என்ற அச்சம் உள்ளது. பல ஆயிரம் பேர்கள் தலைநகர் டாக்காவில் மாபெரும் பேரணிக்காக தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேசம் இதுவரை கண்டிராத ஆர்ப்பாட்டமாக இது மாறக்கூடும் என்றும், பிரதமர் ஷேக் ஹசீனாவின் பதவியை பறிக்கலாம் என்றும் கூறுகின்றனர். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்தியுள்ளார் பிரதமர் ஹசீனா.


பிரதமர் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்துள்ள சட்ட அமைச்சர் அனிசுல் ஹக், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள் உணச்சிவசப்பட்டு பேசுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் தலைவர்களுக்கு பிரதமர் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

துணிந்து போராடாமல் பதவியை விட்டுத்தர பிரதமர் ஹசீனா தயாராக இல்லை என்றே கூறப்படுகிறது. இதனால் நாட்டில் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே அச்சப்படுகின்றனர்.

வங்கதேசம் உருவானதன் பின்னர், கடந்த 2009 முதல் ஆட்சியில் இருந்து வருபவர் ஷேக் ஹசீனா. ஜூலை தொடக்கத்தில் வேலை ஒதுக்கீட்டை ஹசீனா ரத்து செய்த நிலையிலேயே நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தது.

இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் களமிறங்கினர். அது பின்னர் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையாக வலுப்பெற்றது. ஞாயிறன்று மட்டும் 13 பொலிசார் உட்பட 98 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


வங்கதேசத்தின் சமீபத்திய வரலாற்றில் நடந்த போராட்டங்களில் மிக மோசமான நாளாக பார்க்கப்படுகின்றது.

 இதுவரை கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 300 கடந்துள்ளதாக கூறப்படுக்கிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்