தங்கம் வென்ற பிரபல வீரர் பாரிஸ் நகர பூங்காவில் படுத்துறங்கிய அவலம்
5 ஆவணி 2024 திங்கள் 08:30 | பார்வைகள் : 618
ஒலிம்பிக் வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதி தங்குவதற்கு உகந்ததாக இல்லை என புகார் அளித்த பிரபல வீரர் பூங்கா ஒன்றில் தூங்கி ஓய்வெடுத்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியின் நீச்சல் வீரர் Thomas Ceccon என்பவரே பாரீஸ் நகர பூங்கா ஒன்றில் தூங்கி ஓய்வெடுப்பதாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆடவர்களுக்கான 100m backstroke பிரிவில் தங்கம் வென்றுள்ள இவர் 4x100m freestyle பிரிவில் வெங்கலம் வென்றுள்ளார்.
ஆனால் புதன்கிழமை நடந்த 200m backstroke பிரிவு இறுதிப் போட்டியில் தகுதி பெறாத நிலையில், ஒலிம்பிக் வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி தங்குவதற்கு உகந்ததாக இல்லை என புகார் அளித்திருந்தார்.
அறைகளில் குளிரூட்டும் வசதி இல்லை என்றும், வழங்கப்படும் உணவும் மோசமாக உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
பல நாடுகளின் வீரர்களும் இதே நிலையை எதிர்கொள்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
200m backstroke பிரிவு இறுதிப் போட்டியில் தகுதி பெறாதது ஏமாற்றமாக உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், இரவும் சரி, மதியத்திற்கு மேலும் சரி தூங்கி ஓய்வெடுக்கவே முடியவில்லை என்றும், தாம் அதிக சோர்வாக உணர்வதாகவும் Thomas Ceccon புகார் தெரிவித்துள்ளார்.
மதியத்திற்கு மேல் தூங்கி ஓய்வெடுப்பதை வழக்கமாக கொண்டுள்ள தமக்கு, தற்போது மிகுந்த சிரமாக உள்ளது என்றார்.
இந்நிலையிலேயே சவுதி அரேபிய வீரர் ஒருவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறித்த புகைப்படத்திற்கு அவர், இன்று நன்றாக ஓய்வெடு, நாளை வெற்றிகொள் என குறிப்பிட்டுள்ளார்.
இத்தாலிய வீரர் Thomas Ceccon மட்டுமின்றி, அவுஸ்திரேலிய வீராங்கனை Ariane Titmus, ருமேனியா வீரர் Bernadette Szocs ஆகியோரும் பாரீஸ் ஒலிம்பிக் நிர்வாகம் உரிய வசதிகள் எதுவும் வீரர்களுக்கு செய்து தரவில்லை என புகார் அளித்துள்ளனர்.