Val-de-Marne : காவல்துறை வீரர் படுகாயம்..!

11 ஆவணி 2024 ஞாயிறு 14:13 | பார்வைகள் : 6168
அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் சைக்கிள் பந்தயம் ஒன்றை (rodéo urbain) தடுத்து நிறுத்த முற்பட்ட காவல்துறை வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை இரவு இச்சம்பவம் Limeil-Brevannes (Val-de-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. இரவு 9.30 மணி அளவில் Avenue Descartes வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயம் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர்.
வீதியில் ஆபத்தான முறையில் அதிவேகமாக பயணித்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த பணித்தனர். ஆனால் அவர்களது அறிவிப்பை மீறி வேகமாக பயணித்து, வீரர் ஒருவரை மோதி தள்ளியுள்ளனர்.
இதில் காவல்துறை வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். எலும்பு முறிவுகளுக்கு உள்ளான அவர் Kremlin-Bicêtre மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1