Paristamil Navigation Paristamil advert login

கேரளாவில் மீண்டும் சூடு பிடிக்கிறது முல்லைப்பெரியாறு அணை பிரச்னை

கேரளாவில் மீண்டும் சூடு பிடிக்கிறது முல்லைப்பெரியாறு அணை பிரச்னை

12 ஆவணி 2024 திங்கள் 03:20 | பார்வைகள் : 466


முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும்,' என, கேரளாவில் கிறிஸ்தவ அமைப்பினர் களம் இறங்கியதால் பிரச்னை மீண்டும் சூடு பிடிக்கத்துவங்கி உள்ளது.

கேரளாவில் பேரிடர் சம்பவங்கள் நடக்கும்போது எல்லாம் முல்லைப்பெரியாறு அணை தொடர்பான விவாதங்கள் தலை தூக்கும். தற்போது வயநாடு நிலச்சரிவுக்கு பிறகு முல்லைப்பெரியாறு அணை பிரச்னை மீண்டும் தலை துாக்கியுள்ளது. சமீபத்தில் இடுக்கி எம்.பி., டீன்குரியாகோஸ் முல்லைப்பெரியாறு அணை பிரச்னையை லோக்சபாவில் முன் வைத்தார்.

இந்நிலையில் முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கட்டப்பனை அருகே உப்புதரா பகுதியில் 'ஷீரோ மலபார்' என்ற கிறிஸ்தவ அமைப்பின் இளைஞர் அணி சார்பில் பேரணியும், உண்ணாவிரதமும் நடந்தது.

அதேபோல் முல்லைப்பெரியாறு அணை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணக் கோரி உப்புதரா வர்த்தக சங்க கட்டடத்தில் நேற்று மாலை பெரியாறு பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழு சார்பில் கூட்டமும் நடந்தது. அதில் கிறிஸ்தவ அமைப்புகளைச் சார்ந்தவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.

கேரளாவில் முல்லைப்பெரியாறு அணை பிரச்னையை கிறிஸ்தவ அமைப்புகள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் கையில் எடுத்துள்ளதால் மீண்டும் சூடு பிடிக்கத்துவங்கியுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்