செஸ் ஒலிம்பியாட் - முதல் முறையாக தங்கம் வென்று இந்தியா சாதனை
23 புரட்டாசி 2024 திங்கள் 10:19 | பார்வைகள் : 1227
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் முறையாக இந்தியா தங்க பதக்கம் வென்றுள்ளது.
ஹங்கேரி புடாபெஸ்ட்டில் 2024 ஆம் ஆண்டுக்கான 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.
மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட போட்டியில் ஆடவர் (ஓபன்) 10வது சுற்றில் இந்தியாவின் அர்ஜூன் எரிகாசி, அமெரிக்காவின் லெனியர் டோமின்குயிசை வென்றார். குகேஷ் உலக நம்பர் 3 வீரரான ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தினார்.
இந்நிலையில் 10 வது சுற்று முடிவில் 19 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி , ஸ்லோவோனியாக்கு எதிரான போட்டியில் வென்றதன் மூலம் தங்க பதக்கத்தை வென்றுள்ளது.
கடந்த முறை சென்னையில் நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தியா செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்க பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.