காதல் திருமணம் அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணம்.. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
27 புரட்டாசி 2024 வெள்ளி 11:34 | பார்வைகள் : 1389
திருமண உறவு மிகவும் இனிமையானது மற்றும் புனிதமானது. அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி. காதல் திருமணம் நல்லதா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில், ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான உறவை குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்து, அதன் பிறகு குடும்ப உறுப்பினர்கள் ஆண் மற்றும் பெண்ணின் விருப்பத்தை கேட்டு, அவர்களை அறிமுகப்படுத்தி திருமணத்தை உறுதிப்படுத்துகிறார்கள். நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் இரு வீட்டாரின் சம்மதம் உள்ளது.
அதேசமயம் காதல் திருமணத்தில் முதலில் ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் விரும்பி, பிறகு ஒன்றாக வாழ முடிவு செய்கிறார்கள். முடிவெடுத்த பிறகு குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்தை கேட்கிறார்கள். சில நேரங்களில் குடும்ப உறுப்பினர்கள் அவர்களது விருப்பத்தை விரும்புவதில்லை, அதனால் அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் காதல் திருமணத்தில் ஆண் மற்றும் பெண், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், அவரவர்கள் சம்மதத்திற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
நிச்சயிக்கப்பட்ட திருமணம் உங்கள் குடும்பத்தின் ஆதரவை உங்களுக்கு வழங்குகிறது. இது தவிர, சிக்கலான சூழ்நிலைகளிலும் அவர்கள் உங்களை ஆதரிக்கிறார்கள்.
நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில், ஆணும், பெண்ணும் ஒருவரை பற்றி ஒருவரின் விருப்பு, வெறுப்புகளை தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும், அவர்களுடன் பேசி பழகவும் முயற்சி செய்கிறார்கள், அதுவும் ஒரு நல்ல அனுபவமாகும்.
நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் ஆண் அல்லது பெணிண்ன் திருமண கனவு நனவாகும். ஏனென்றால், இரு குடும்பத்தினரும் இணைந்து திருமணத்தை பெரிய விசேஷமாக ஏற்பாடு செய்கிறார்கள், இதனால் நீங்கள் திருமணத்தை முழுமையாக அனுபவிக்க முடியும்.
காதல் திருமணத்தில், துணையின் இயல்பு, குடும்பம், சுபாவம் போன்றவற்றைப் பற்றி முன்பே அறிந்திருப்பார். அப்படிப்பட்ட நிலையில், திருமணத்திற்குப் பிறகு, ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பார்கள்.
காதல் திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆண்களும், பெண்களும் தங்கள் குடும்ப பெரியவர்களின் ஆதரவும், அனுபவமும் இல்லாமல், தங்கள் திருமண வாழ்க்கையில் சில தவறுகளை செய்கிறார்கள்.
நிபுணர்களின் கூற்றுப்படி, அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, இரண்டு திருமணங்களிலும் துணை நன்றாக இருந்தால், இரண்டு திருமணங்களும் நன்றாக இருக்கும். இரு திருமணங்களிலும் உங்களது துணையின் ஆர்வத்தை உருவாக்க, நீங்கள் ஒருவருக்கொருவர் ஆச்சரியப்படுத்துவது அல்லது அவ்வப்போது பரிசுகளை வழங்குவது மிகவும் முக்கியம். மேலும், தம்பதிகள் ஒருவருக்கொருவர் முன்னேற்றம் அடைய ஊக்குவிக்க வேண்டும். இது உறவை பலப்படுத்துகிறது. இருவருக்குள்ளும் சண்டை வரும் போதெல்லாம், உரையாடலை நிறுத்துவதற்குப் பதிலாக சண்டைக்கான காரணத்தை அகற்றுவது மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளார்.