அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கப்படும் mpox பாதிப்பு
27 புரட்டாசி 2024 வெள்ளி 12:14 | பார்வைகள் : 2006
அவுஸ்திரேலியாவில் கடந்த 3 மாதங்களில் மட்டும் mpox பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
குறைந்த அளவிலான தடுப்பூசி காரணமாக கிராமப்பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என்றே சுகாதார நிபுணர்கள் தரப்பு கவலை தெரிவித்துள்ளனர்.
இதுவரை, இந்த ஆண்டு மட்டும் 737 பேர்கள் mpox பாதிப்புக்கு இலக்காகியுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலான எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் பதிவானவை என்றே தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டில் பதிவான எண்ணிக்கை வெறும் 26 என்றும், 2022ல் 144 பேர்களுக்கு mpox பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு மே மாதத்தில் இருந்தே பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைப்பு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
mpox தொற்றானது பாதிக்கப்பட்ட மிருகத்தில் இருந்து மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புகள் அதிகம் என்றும், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கும் மிக எளிதாக பரவலாம் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.