Paristamil Navigation Paristamil advert login

கண்களை தாக்கும் கணினி

கண்களை தாக்கும் கணினி

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 8914


இன்றைய பறக்கும் யுகத்தில் கணினி பக்கத்தில் அமர்ந்தபடி தான் எல்லா வேலைகளும் செய்து முடிக்கப்படுகின்றன. தொழில் நுட்ப வளர்ச்சிக்கு இது உற்சாகத்தை அளிக்கக்கூடியது என்றாலும் உடல்நலத்துக்கு கேடு என்கிறது மருத்துவ ஆய்வு.

கணினி முன் அமர்ந்து பணி செய்வபர்களில் ஆண்கள் தான் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீங்களும் அந்த வரிசையில் உள்ளவர்கள் என்றால் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.கணினி முன் அதிகநேரம் அமருபவர்களுக்கு முதல் பாதிப்பு ஏற்படும் பகுதி கண்தான். ஆகையால் அதில் இருந்து தப்பித்துக் கொளள சில வழிகள்....

முதலில் அதிக நேரம் கணினியைப் பார்ப்பவர்கள் கண்கள் மேல் கவனம் செலுத்த வேண்டும். மிக பக்கத்தில் இருந்து கணினி திரைவில் வெளிச்சத்தை பார்ப்பதால் கண்கள் பாதிப்படைய நிறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் 15 நிமிடத்திற்கு ஒரு முறை கண்களுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது.

அலுவலகத்தில் வேலை செங்கிறவர்களுக்கு இது சாத்தியப்படாது. ஆனால் இதற்கும் வழி இருக்கிறது. உள்ளங்கையை கண்கள் மேல் வைத்து ஒரு இரண்டு நிமிடம் ஓய்வு கொடுக்கலாம். இது ஓரளவு கண்களை பாதிப்பில் இருந்து காப்பாற்றும்.

தொடர்ந்து கணினி முன்பு வேலை செய்யும் நபர்கள் இடை இடையே கைகளையும், உடலையும் நீட்டி மடக்கி சிறிய உடற்பயிற்சி செய்து கொள்வது மிக நல்லது.கணினியின் முன் அமர்ந்து டைப் செய்கையில் உடலை நேர்கோட்டில் வைத்திருப்பது மிக அவசியமான ஒன்று.

இதனால் முதுகுத்தண்டு நேராக இருக்கும் இதுபோல் செய்தால் உடல்வலி அதிகம் வருவதை தவிர்க்கலாம்.பாதங்களை தரை மீது சமமாக வைத்திருப்பது இன்னும் சிறந்ததது. உடலின் அனைத்து பலமும் பாதத்தின் மேல் இருப்பதால் பாதத்தை சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

டைப் செய்யும் போது முழங்கைகளை இடையில் பக்கத்தில் வைத்திருப்பதால் கைகளுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். இதனால் சரியான முறையில் அமர்ந்து டைப் செய்ய முடியும். அதோடு தோள்பட்டை வலியையும் எளிதாக குறைக்கலாம்.

கணினி திரையில் வெளிச்சத்தை குறைத்து வைத்துக் கொள்வது மிக அவசியமான ஒன்றாகும். இதனால் கண்களை எளிதாக பாதுகாக்கலாம்.இந்த 6 செயல்களையும் செய்து கணினி பாதிப்பில் இருந்து கண்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள். தவற விட்டால் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் செய்வது போன்ற நிலை தான் ஏற்படும்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்